20 பேர்கள் மட்டுமே கலந்து கொண்ட கேரள முதல்வரின் மகள் திருமணம்!

கேரள மாநில முதல்வரின் மகளும் ஐடி தொழிலதிபருமான வீணா என்பவரின் திருமணம் இன்று மிக எளிமையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள் சேர்த்து மொத்தம் 20 பேர்கள் மட்டுமே கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது கொரோனா வைரஸ் ஊரடங்கால் நாடு முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு இருக்கும் நிலையில் ஒருசில திருமணங்கள் மட்டுமே ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களின் மூத்த
 
20 பேர்கள் மட்டுமே கலந்து கொண்ட கேரள முதல்வரின் மகள் திருமணம்!

கேரள மாநில முதல்வரின் மகளும் ஐடி தொழிலதிபருமான வீணா என்பவரின் திருமணம் இன்று மிக எளிமையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள் சேர்த்து மொத்தம் 20 பேர்கள் மட்டுமே கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸ் ஊரடங்கால் நாடு முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு இருக்கும் நிலையில் ஒருசில திருமணங்கள் மட்டுமே ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களின் மூத்த மகள் வீணா என்பவருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகரும் இந்திய இளைஞர் அணி கூட்டமைப்பு தலைவர் முகமது ரியாஸ் என்பவருக்கும் திருமணம் நடந்தது

இந்த திருமணத்தில் முதல்வர் குடும்பம் உள்பட மொத்தம் 20 பேர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்தன. முகமது ரியாஸ் மணமகள் கழுத்தில் தாலி கட்டியவுடன் அவரைச் சுற்றி இருந்தவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த திருமணத்தை முதல்வர் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் ஊரடங்கு காரணமாக மிக எளிமையாக முதல்வரின் வீட்டிலேயே நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web