இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ரத்து: கேரள முதல்வர் அறிவிப்பு

 
pinarayi

கேரள மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறன்று முழு ஊரடங்கு ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கேரளாவில் தினமும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் கடந்த 3 நாட்களாக கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது

இந்த நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் குறைந்து வருவதை அடுத்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கு திரும்ப பெறப்படுவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

ஆனால் அதே நேரத்தில் ஊரடங்கு விலக்கப்பட்டதால் பொதுமக்கள் அஜாக்கிரதையுடன் இருக்க கூடாது என்றும் மாஸ்க் அணிந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டு தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 

மேலும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் கூடியவிரைவில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்

From around the web