கேரளாவில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உண்டா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மட்டும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கமே கோலோச்சி வந்தது. சட்டசபை தேர்தல் என்றாலும் நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் இது மட்டுமே விதியாக இருந்தது. கடந்த கார்த்திகை மாதம் ஐயப்ப சீசனிலும் அதற்கு முன் நடந்த பூஜைகளிலும் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துகிறேன் என்ற பெயரில் முதல்வர் பினராயி விஜயன் எடுத்த நடவடிக்கைகள் யாருக்கும் பிடிக்கவில்லை. பெண்கள் யாரும் செல்லக்கூடாது என்ற கடும் கட்டுப்பாட்டை உடைத்து கோவிலுக்குள் பெண்களை செல்ல வைத்தவர். இதனால் கம்யூனிஸ்ட்
 

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மட்டும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கமே கோலோச்சி வந்தது. சட்டசபை தேர்தல் என்றாலும் நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் இது மட்டுமே விதியாக இருந்தது.

கேரளாவில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உண்டா

கடந்த கார்த்திகை மாதம் ஐயப்ப சீசனிலும் அதற்கு முன் நடந்த பூஜைகளிலும் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துகிறேன் என்ற பெயரில் முதல்வர் பினராயி விஜயன் எடுத்த நடவடிக்கைகள் யாருக்கும் பிடிக்கவில்லை.

பெண்கள் யாரும் செல்லக்கூடாது என்ற கடும் கட்டுப்பாட்டை உடைத்து கோவிலுக்குள் பெண்களை செல்ல வைத்தவர்.

இதனால் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது பெரிய அதிருப்தியில் மக்கள் இருக்கிறார்கள்.

இந்தத் தேர்தலையொட்டி, பாரத் தர்ம ஜன சேனா (பிஜேடிஎஸ்) கட்சியுடனும் பி.சி.தாமஸ் தலைமையிலான கேரள காங்கிரஸுடனும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக பாஜக நேற்று அறிவித்தது.

இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் நேற்று டெல்லியில் கூறும்போது, “கேரளாவில் பாஜக 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பிஜேடிஎஸ் 5 தொகுதிகளிலும் கேரள காங்கிரஸ் 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. இம்மாநிலத்தில் சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களின் ஆதரவையும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுள்ளது” என்றார்.

இந்த தேர்தலில் வாக்குகளை பாஜக அறுவடை செய்ய வாய்ப்புள்ளதாகவே மக்கள் கருதுகின்றனர்.

From around the web