கெளம்புங்கப்பா மெட்ரோ ட்ரெயின்க்கு! மெட்ரோ ட்ரெயின்ல  சலுகை!

விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று மற்றும் நாளை சென்னை மெட்ரோ ரயிலில் 50 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட உள்ளதாகத் தகவல்!
 
கெளம்புங்கப்பா மெட்ரோ ட்ரெயின்க்கு! மெட்ரோ ட்ரெயின்ல சலுகை!

இந்திய அரசானது சுதந்திர தினம் குடியரசு தினம் மகாத்மா காந்தி பிறந்த நாள் இந்த மூன்று தினங்கள் மட்டுமே பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் தேவைக்கேற்ப விடுமுறைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் குறிப்பாக தைப் பொங்கல்,  மாட்டு பொங்கல் திருவிழா போன்ற திருவிழாக்களுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் தமிழ் புத்தாண்டுகும் விடுமுறை அளிக்கப் படுகின்றன. மேலும் ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை அளிக்க உள்ளனர்.

ugadi

கிறிஸ்தவர்களின் பண்டிகையான  கிறிஸ்துமஸ் இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றன.  இன்றைய தினம் தெலுங்கு மற்றும் கன்னட மக்களில் யுகாதி திருநாள் கொண்டாடப்படுகிறது. மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு யுகாதி தின நல்வாழ்த்துகளை கூறியுள்ளார். இந்நிலையில் இன்று காலை சென்னையில் தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி இன்று மட்டும் நாளையும் சென்னை கடற்கரையோரத்தில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூடுவதற்கு தடையும் விதித்துள்ளது.

இந்நிலையில் தற்போது சென்னையில் அதி வேகமாக பயணிக்கும் மெட்ரோ ட்ரெயின் ஆனது தற்போது சில சலுகைகளை விதித்துள்ளது.  மேலும் சென்னை மெட்ரோ டிரெயினில் இன்றும் மற்றும் நாளையும் 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் யுகாதி மற்றும் தமிழ் வருடப் பிறப்பை ஒட்டி 50 % கட்டண சலுகை அறிவித்துள்ளது மெட்ரோ ரயில்வே நிர்வாகம். இதனால் பயணிகள் மிகவும் சந்தோஷத்துடன் பயணிக்கின்றனர்.

From around the web