கொரோனாவை எதிர்கொண்டு வாழக் கற்றுக்கொள்ளணும்… கெஜ்ரிவால் பேச்சு!!

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறித்து பேசிய முதல்வர் கெஜ்ரிவால் கொரோனாவை எதிர்கொண்டு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். கெஜ்ரிவால் கூறியதாவது, “டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 15 நாட்களில் இரண்டு மடங்காக ஆகியுள்ளது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன், இருப்பினும் நம்முடைய தொடர் சிகிச்சைகளால் உயிர் இழப்புகள் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதிகமானோர் சிகிச்சை முடித்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், சிகிச்சை அளிக்கப் போதுமான அளவு படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர்கள், இதர மருத்துவ உபகரணங்கள் உள்ளநிலையில்
 
கொரோனாவை எதிர்கொண்டு வாழக் கற்றுக்கொள்ளணும்… கெஜ்ரிவால் பேச்சு!!

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறித்து பேசிய முதல்வர் கெஜ்ரிவால் கொரோனாவை எதிர்கொண்டு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

கெஜ்ரிவால் கூறியதாவது, “டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு  கடந்த 15 நாட்களில் இரண்டு மடங்காக ஆகியுள்ளது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன், இருப்பினும் நம்முடைய தொடர் சிகிச்சைகளால் உயிர் இழப்புகள் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அதிகமானோர் சிகிச்சை முடித்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், சிகிச்சை அளிக்கப் போதுமான அளவு படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர்கள், இதர மருத்துவ உபகரணங்கள் உள்ளநிலையில் தான் கவலையடையத் தேவையில்லை.

கொரோனாவை எதிர்கொண்டு வாழக் கற்றுக்கொள்ளணும்… கெஜ்ரிவால் பேச்சு!!

கொரோனாவை கட்டுப்படுத்த நிரந்தரத் தீர்வாக ஊரடங்கினைக் கருத்தில் கொள்ள முடியாது, தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி ஒருபுறம் தீவிரமாக செயலில் இருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.

ஊரடங்கினால் பொருளாதாரம் மட்டுமின்றி மக்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும் நிலையில் மக்கள் கொரோனாவை எதிர்கொண்டு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும் தற்போது மருத்துவமனைகளில் குணமடைவோருக்கு மருந்தினைவிட, அவர்களின் மனவலிமையே மிகச் சிறந்த மருந்தாக நோய்க்கு எதிராகப் போராடுகின்றது, அதுபோல் மக்கள் அனைவரும் வலிமையுடன் கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும்.

ஊரடங்கு தற்காலிகத் தீர்வுதான் என்பதை நாம் மனதில் கொண்டு சிறப்பாக செயல்படுதல் வேண்டும்” என்று கூறியுள்ளார்.

From around the web