சென்னையிலும் கீழடி செய்த சாதனை

தமிழர்கள் எந்த அளவிற்கு பழமையானவர்கள் என்பதை நிரூபிக்க கீழடியில் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில் சென்னையிலும் இந்த கீழடி விஷயம் ஒரு புதிய சாதனை செய்துள்ளது சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற 43வது புத்தகக் கண்காட்சியில் கீழடி அகழாய்வு புத்தகம் மட்டும் 23 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது கீழடி குறித்த புத்தகம் தமிழ், ஆங்கிலம் மட்டுமன்றி மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஜப்பானியம், அரபி மற்றும் கொரிய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு
 
சென்னையிலும் கீழடி செய்த சாதனை

தமிழர்கள் எந்த அளவிற்கு பழமையானவர்கள் என்பதை நிரூபிக்க கீழடியில் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில் சென்னையிலும் இந்த கீழடி விஷயம் ஒரு புதிய சாதனை செய்துள்ளது

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற 43வது புத்தகக் கண்காட்சியில் கீழடி அகழாய்வு புத்தகம் மட்டும் 23 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கீழடி குறித்த புத்தகம் தமிழ், ஆங்கிலம் மட்டுமன்றி மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஜப்பானியம், அரபி மற்றும் கொரிய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு நூல்கள் விற்பனை செய்யப்பட்டன.

இந்த கண்காட்சியில் இடம் பெற்ற கீழடி அகழாய்வு குறித்த மாதிரிகள், வான்வெளிப் பார்வை மாதிரி, தொல் பொருட்களின் முப்பரிமாண வடிவம் அடங்கிய மெய்நிகர் காட்சியகம் பொதுமக்களின் பேராதரவை பெற்றது. இவ்வாறு தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

From around the web