கருப்பர் கூட்டம் சுரேந்திரன் சரண்டர்: ஆரம்பித்தது முருகனின் திருவிளையாடல்

முருகப்பெருமானின் கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக யூடியூபில் விமர்சனம் செய்த சுரேந்திரன் என்பவர் மீதும் அவரது யூடியூப் சேனல் மீதும் காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தன இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த வீடியோவுக்கு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் செந்தில் வாசன் என்பவரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர் இந்த நிலையில் கந்தசஷ்டி குறித்து அவதூறாக வீடியோவில் பேசிய சுரேந்திரன்
 

கருப்பர் கூட்டம் சுரேந்திரன் சரண்டர்: ஆரம்பித்தது முருகனின் திருவிளையாடல்

முருகப்பெருமானின் கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக யூடியூபில் விமர்சனம் செய்த சுரேந்திரன் என்பவர் மீதும் அவரது யூடியூப் சேனல் மீதும் காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தன

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த வீடியோவுக்கு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் செந்தில் வாசன் என்பவரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்

இந்த நிலையில் கந்தசஷ்டி குறித்து அவதூறாக வீடியோவில் பேசிய சுரேந்திரன் என்பவரையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் இன்று அவர் புதுச்சேரியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் சரண் அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இதனை அடுத்து தமிழக காவல்துறையினர் புதுச்சேரி வந்து அவரை தமிழகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் நாளை முதல் தீவிர விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கந்தசஷ்டிகவசம் விவகாரத்தில் அடுத்தடுத்து கைது நடவடிக்கை நடந்து வருவதால் முருகப்பெருமான் தனது திருவிளையாடலை ஆரம்பித்துவிட்டதாக முருக பக்தர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web