கருணாஸ் ஜாமீனில் விடுதலை: நீதி வென்றதாக பேட்டி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட கருணாஸ் எம்.எல்.ஏ, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார். மேலும் அவர் ஐபிஎல் போட்டிக்கு எதிராக தடையை மீறி ஊர்வலம் நடத்தியதாக இரண்டாவது முறையும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த 2 வழக்குகளில் ஜாமீன் கேட்டிருந்த கருணாஸூக்கு நேற்று நிபந்தனை ஜாமின் கிடைத்தது. இதனையடுத்து கருணாஸ் இன்று காலை விடுதலை ஆனார். விடுதலைக்கு
 

கருணாஸ் ஜாமீனில் விடுதலை: நீதி வென்றதாக பேட்டி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட கருணாஸ் எம்.எல்.ஏ, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார். மேலும் அவர் ஐபிஎல் போட்டிக்கு எதிராக தடையை மீறி ஊர்வலம் நடத்தியதாக இரண்டாவது முறையும் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த 2 வழக்குகளில் ஜாமீன் கேட்டிருந்த கருணாஸூக்கு நேற்று நிபந்தனை ஜாமின் கிடைத்தது. இதனையடுத்து கருணாஸ் இன்று காலை விடுதலை ஆனார். விடுதலைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், ‘தன் மீது பொய் வழக்கு புனையப்பட்டதால் கைது செய்யப்பட்டதாகாவும், தன் மீது போடப்பட்ட வழக்கில் உண்மை நின்றது, நீதி வென்றதாகவும் அவர் கூறினார்.

நிபந்தனை ஜாமீன் பெற்ற கருணாஸ் இன்னும் 30 நாட்களுக்கு சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web