உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன்: வருத்தம் தெரிவித்த கருணாஸ்

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே நான் அடித்துவிடுவேன் என்று பயப்பட்டார் என்றும், காவல்துறை உயரதிகாரி ஒருவரை போலீஸ் யூனிபார்மை கழட்டி வைத்துவிட்டு என்னுடன் ஒத்தைக்கு ஒத்தை மோத தயாரா? என்றும் ஆவேசமாக பேசினார் இதனையடுத்து கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த நிலையில் தன்னுடைய ஆவேசமாக பேச்சுக்கு கருணாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் பேசிய முழு வீடியோவையும் கேட்டு விட்டு என்னை
 

உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன்: வருத்தம் தெரிவித்த கருணாஸ்

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே நான் அடித்துவிடுவேன் என்று பயப்பட்டார் என்றும், காவல்துறை உயரதிகாரி ஒருவரை போலீஸ் யூனிபார்மை கழட்டி வைத்துவிட்டு என்னுடன் ஒத்தைக்கு ஒத்தை மோத தயாரா? என்றும் ஆவேசமாக பேசினார்

இதனையடுத்து கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் தன்னுடைய ஆவேசமாக பேச்சுக்கு கருணாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் பேசிய முழு வீடியோவையும் கேட்டு விட்டு என்னை விமர்சியுங்கள். அன்றைய கூட்டத்தில் பலரை ஒருமையில் பேசியதற்காக எனது மனைவியிடம் அன்றே வருத்தத்தை தெரிவித்தேன். தவறு செய்த அதிகாரிகளை தான் மேடையில் விமர்சித்தேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு மறுப்பது ஏன்?

கூவத்தூர் சம்வபம் தொடர்பாக பேசுகிறீர்கள். ஜனாதிபதியை நான் தான் ஓட்டு போட்டு தேர்வு செய்தேன். மறுக்க முடியுமா?, அதே போலதான் கூவத்தூரிலும் முதல்வரை தேர்வு செய்தேன்.

முக்குலத்தோர் புலிப்படை இளைஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துகின்றனர். பொய் வழக்கு போடுகின்றனர். நான் யாரையும் தவறாக பேசவில்லை. குறிப்பிட்ட சமூகம் குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உணர்ச்சி வசப்பட்டு பேசியதற்கான ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கருணாஸ் கூறியுள்ளார்.

From around the web