ஸ்டாலினை கருணாநிதி நம்பவில்லை பரப்புரையில் முதல்வர்!

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது.இதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. மேலும் தமிழகத்தில் அதிமுக ,பாஜக, பாமக கட்சியுடனும், திமுக கட்சியானது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கூட்டணியில் உள்ளது.

மேலும் அதற்கான தொகுதி பங்கீடுகள் பிரிக்கப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மேலும் பல கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதன்படி தமிழகத்தில் முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிக்கும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டுகிறார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தின் பல பகுதிகளில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோட்டில் அமைச்சர் அன்பழகன் ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது அவர் கூறினார் ஸ்டாலினை கருணாநிதி நம்ப வில்லை எனவும் கூறினார். ஏனென்றால் ஸ்டாலின் திறமை மீது நம்பிக்கை இல்லாததால் தான் ஸ்டாலினுக்கு திமுக தலைவர் பதவியை கருணாநிதி தரவில்லை எனவும் பிரச்சாரத்தில் இது பழனிசாமி கூறினார்.