"அடுத்த லாக் டவுன்" கதறும் கர்நாடகா! 14 நாட்கள் முழு ஊரடங்கு!

கர்நாடக மாநிலத்தில் நாளை இரவு முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது!
 
"அடுத்த லாக் டவுன்" கதறும் கர்நாடகா! 14 நாட்கள் முழு ஊரடங்கு!

தற்போது மக்களிடையே ஆட்கொல்லி நோயாக வளர்ந்துள்ளது கொரோனா வைரஸ். கடந்த ஆண்டில் இந்தியாவின் பெரும் னால் கட்டுப்படுத்தப்பட்டது எனினும் சில நாட்களாக இந்நோயின் இரண்டாவது அலையாக எழுந்து மக்களுக்கு பெரும் துன்பத்தை விளைவிக்கிறது.குறிப்பாக இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா நோய்க்கு எதிராக பல்வேறு கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டன. மேலும் இந்தியாவில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. மேலும் ஒரு சில மாநிலங்களில் முழுநேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன.yediyurappa

மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தின் காவேரி நீர் கொடுக்கும் மாநிலமாக உள்ள கர்நாடகாவில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது. இதனை அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார், அதன்படி கர்நாடகாவில் நாளை இரவு முதல் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.மேலும் இந்த முழுநேர ஊரடங்கு 14 நாட்கள் அதாவது இரண்டு வாரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 34 ஆயிரம் பேருக்கு கொரோனா  பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதால் தற்போது  அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது .மேலும் இந்த ஊரடங்கின் போது அத்தியாவசிய பொருள்களை விற்க காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .மேலும் கர்நாடக மாநிலத்தில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். மேலும் இதற்கு முன்னதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா கொரோனா  உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web