தமிழகத்தின் அண்டை மாநில முதல்வருக்கு கொரோனா: பரபரப்பு தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை பார்த்தோம் இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன முதல்வர்
 
தமிழகத்தின் அண்டை மாநில முதல்வருக்கு கொரோனா: பரபரப்பு தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது

அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன முதல்வர் எடியூரப்பாவும் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்

எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் என்னுடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்

From around the web