கர்நாடக பாஜக தலைவருக்கு கொரோனா பாதிப்பு: பரபரப்பு தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மிக வேகமாக பரவி வந்தாலும் இன்னொரு பக்கம் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கிட்டத்தட்ட அனைத்துமே திறந்து விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பதவியில் இருக்கும் விஐபிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் அவர்களுக்கு கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கடந்த சில நாட்களாக
 

கர்நாடக பாஜக தலைவருக்கு கொரோனா பாதிப்பு: பரபரப்பு தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மிக வேகமாக பரவி வந்தாலும் இன்னொரு பக்கம் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கிட்டத்தட்ட அனைத்துமே திறந்து விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பதவியில் இருக்கும் விஐபிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் அவர்களுக்கு கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கடந்த சில நாட்களாக கொரனோ அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இதுகுறித்து நளின்குமார் தனது டுவிட்டரில் கூறியபோது எனக்கு ஒரு பாதிப்பு உறுதியானதை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளவும் என்றும் தெரிவித்துள்ளார்

கர்நாடக மாநில பாஜக தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அம்மாநில பாஜக தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது

From around the web