கர்ணன் பட "பண்டாரத்தி பாடல்" சர்ச்சை! தனுசுக்கு நோட்டீஸ்!

கர்ணன் படத்தின் பண்டாரத்தி பாடலை நீக்க கோரும் வழக்கில் நடிகர் தனுசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்!
 
கர்ணன் பட "பண்டாரத்தி பாடல்" சர்ச்சை! தனுசுக்கு நோட்டீஸ்!

தனது நடிப்பாலும் தனது திறமையாலும் இன்று இது பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்து இருந்தார் .மேலும் இத்திரைப்படத்தில்  அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்திருந்தார். மேலும் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது.

karnan

மேலும் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இத்திரைப்படத்தினை பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வெளியானது.

இப்படத்தின் பாடல் ஒன்றும் வெளியானது. அப்பாடல் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. மேலும் அப்பாடலை பிரபல பாடகர் பாடியுள்ளார் இப்பாடலை குறித்து சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. இப்பாடலை நீக்க வேண்டுமென ராஜா பிரபு என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்..மேலும் அவர்  பாடலை நீக்கும் வரை படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு தொடுத்துள்ளார். இதனால் சென்னை உயர்நீதிமன்ற கிளை பாடலைப் பாடிய தேவாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஏற்கனவே இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் தனுசுக்கும் ஐகோர்ட் கிளை தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

From around the web