கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் உடல்நிலை குறித்த அதிர்ச்சி தகவல்


கன்னியாகுமரி தொகுதி எம்பியும், பிரபல தொழிலதிபருமான வசந்தகுமார் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அவரது மகனும் நடிகருமான விஜய் வசந்த் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
தனது தந்தைக்கு சர்க்கரை நோய் தவிரை வேறு எந்த இணைநோயும் இல்லை என்றும்,ம் அவர் படிப்படியாக குணமாகி வருவதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இருப்பினும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் நடிகர் விஜய்வசந்த் தெரிவித்து இருந்தார்
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது