கன்னியாகுமரியில் பொன்னாரின் வெற்றி வாய்ப்பு எப்படி

தமிழ்நாட்டில் எப்போதுமே பாரதிய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகவே இருக்கும். ஆன்மிக ரீதியிலான விஷயங்களை உள்ளடக்கிய ஊர் என்பதால் இந்த ஊரில் பாரதிய ஜனதாவின் வெற்றி வாய்ப்பு அதிகமே. இருப்பினும் கடந்த முறை எம்.பியாக இருந்த பொன் ராதாகிருஷ்ணனுக்கே இம்முறையும் சீட் கொடுக்கப்பட இருக்கிறது. கடந்த முறை பிஜேபி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோற்றது. கன்னியாகுமரியில் மட்டுமே வென்றது. இத்தொகுதியில் வெற்றிபெற்ற பொன் ராதாகிருஷ்ணன் தான் வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் உள்ளார். இத்தேர்தலில் பாஜக சார்பில்
 
Pon Radhakrishnan

தமிழ்நாட்டில் எப்போதுமே பாரதிய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகவே இருக்கும். ஆன்மிக ரீதியிலான விஷயங்களை உள்ளடக்கிய ஊர் என்பதால் இந்த ஊரில் பாரதிய ஜனதாவின் வெற்றி வாய்ப்பு அதிகமே.

கன்னியாகுமரியில் பொன்னாரின் வெற்றி வாய்ப்பு எப்படி

இருப்பினும் கடந்த முறை எம்.பியாக இருந்த பொன் ராதாகிருஷ்ணனுக்கே இம்முறையும் சீட் கொடுக்கப்பட இருக்கிறது.

கடந்த முறை பிஜேபி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோற்றது. கன்னியாகுமரியில் மட்டுமே வென்றது. இத்தொகுதியில் வெற்றிபெற்ற பொன் ராதாகிருஷ்ணன் தான் வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் உள்ளார்.

இத்தேர்தலில் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுவது ஏற்கெனவே உறுதியாகியுள்ளது. அவர் தொடர்ந்து களப்பணிகளைச் செய்து வருகிறார். காங்கிரஸைப் பொறுத்தவரை வேட்பாளராக கடும் போட்டி நிலவுகிறது. வசந்தகுமார், வின்சென்ட் உள்ளிட்ட பலரும் தொகுதியைப் பெற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்குகள் பிரிந்த நிலையில் எளிதில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு இந்தமுறை கடும் போட்டி இருக்கும் என்றே கூறப்படுகிறது. மத்திய அமைச்சராக இருந்ததால் பொன் ராதாகிருஷ்ணன் தன் தொகுதிக்கு சில மக்கள் நலத்திட்டங்களையும், சாலை, மேம்பாலம் உள்ளிட்ட திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார்.

இருப்பினும், மத ரீதியாக வாக்குகள் பிரியும் இத்தொகுதியில் மத்திய, மாநில அரசுகள் மீதான மக்களின் அதிருப்தி போன்றவற்றையும் எதிர்கொள்ளும் சூழலில் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளார். பாஜக எதிர்ப்பு வாக்குகள் அனைத்து ஒரே அணிக்கு செல்லும் சூழல் இருப்பதும் அக்கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

From around the web