கொரோனாவுக்கு நிதியில்லை, டெண்டருக்கு மட்டும் நிதியுள்ளதா? கனிமொழி கேள்வி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி பற்றாக்குறை என்று கூறும் தமிழக அரசு தற்போது இரண்டு டெண்டர்களை திறக்கிறது ஆச்சரியப்படும் வகையில் உள்ளதாக திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கொரோனா சூழலால் வருமானம் இன்றி சிக்கித்தவித்து வரும் மக்களுக்கு நிதி நிவாரணம் வழங்க மனமில்லாமல், பற்றாக்குறை எனக் கூறி வருகிறது அரசு. ஆனால், தஞ்சை மற்றும் கோவையில் தலா ரூ.1000 கோடிக்கு மேல் இரண்டு டெண்டர்கள் இன்று திறக்கப்படுகின்றன. இந்த பெருந்தொற்று
 

கொரோனாவுக்கு நிதியில்லை, டெண்டருக்கு மட்டும் நிதியுள்ளதா? கனிமொழி கேள்வி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி பற்றாக்குறை என்று கூறும் தமிழக அரசு தற்போது இரண்டு டெண்டர்களை திறக்கிறது ஆச்சரியப்படும் வகையில் உள்ளதாக திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கொரோனா சூழலால் வருமானம் இன்றி சிக்கித்தவித்து வரும் மக்களுக்கு நிதி நிவாரணம் வழங்க மனமில்லாமல், பற்றாக்குறை எனக் கூறி வருகிறது அரசு. ஆனால், தஞ்சை மற்றும் கோவையில் தலா ரூ.1000 கோடிக்கு மேல் இரண்டு டெண்டர்கள் இன்று திறக்கப்படுகின்றன.

இந்த பெருந்தொற்று காலத்தில் உட்கட்டமைப்பு, புதிய திட்டங்கள் செயல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, அந்த நிதியை மக்களின் நிவாரணத்திற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் பணிகளுக்கும் அரசு பயன்படுத்த வேண்டும். இந்த நேரத்திலும் பணமே குறிக்கோளாக செயல்படக் கூடாது.

கனிமொழியின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web