மகளிர் சுய உதவிக்குழு போல இளைஞர்களுக்கு சுய உதவி குழு அமைக்கப்படும் பிரச்சாரத்தில் கனிமொழி!

இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் பிரச்சாரத்தில் கனிமொழி!
 
மகளிர் சுய உதவிக்குழு போல இளைஞர்களுக்கு சுய உதவி குழு அமைக்கப்படும் பிரச்சாரத்தில் கனிமொழி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளதால் அதற்காக தமிழகத்தில்  மிக மும்முரமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் மிகவும் வலிமையான மிகவும் தொன்மையான எதிர்க்கட்சியாக உள்ள திராவிட முன்னேற்ற கழகம் என்று அழைக்கப்படும் திமுக கட்சியுடன் கூட்டணி தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை வைத்துள்ளது.

congress

மேலும் ம்திமுக கட்சியும் விடுதலை சிறுத்தை கட்சியையும் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை திமுக சந்திக்கவுள்ளது. திமுக சார்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.  திமுக ஸ்டாலின் தமிழகத்தில் பல பகுதிகளுக்கு சென்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

 திமுக சார்பில் எம்பியாக உள்ள கனிமொழி திமுக வேட்பாளர்கள் பலரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும்  திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீவைகுண்டம் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் ஆதரித்து திறந்த வாகனத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறினார் மகளிர் சுய உதவிக்குழு போல இளைஞர்களுக்கு சுய உதவி குழு அமைக்கப்படும் எனவும் பிரச்சாரத்தில் கூறினார்.

இளைஞர்கள் தொழில் தொடங்க வட்டி இல்லாத கடன் வழங்கப்படும் எனவும்  கனிமொழி கூறினார்.100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக மாற்றப்படும் எனவும் அவர் வாக்குறுதி கொடுத்தார். திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தொடர்ந்து வாக்கு சேகரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web