கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்பி கனிமொழி வாக்களித்தார்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்றைய தினம் நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று தற்போது வாக்கு இயந்திரங்கள் சீலமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள பல கோடி மக்களும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். மேலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை 12 மணி வரை நடைபெற்றது. அனைவரும் சமூக இடைவெளிவிட்டு வரிசையில் நின்று வாக்குப்பதிவு இட்டனர். மேலும் வாக்களிக்க வந்தவர்களுக்கு சனிடைசர், முகக்கவசம் ,கையுறை போன்றவை வழங்கப்பட்டது.

மேலும் அவர்களின் உடல் வெப்பநிலையானது கணக்கிடப்பட்டு அவர்கள் வாக்களிக்கின்றனர். மேலும் தமிழகத்தில் காலை முதலே தமிழகத்தின் பிரபலங்களான அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றோர் தங்களது தொகுதிக்குட்பட்ட பகுதியில் சென்று வாக்கினை பதிவு செய்தனர். மேலும் தமிழகத்தில் கொரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மணி முதல் 7 மணி வரையிலும் கடைசி ஒரு மணி நேரம் வாக்களிக்க ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக எம்பியாக உள்ள கனிமொழிக்கு கொரோனா கண்டறியப்பட்டது அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்ட மேலும் அவர் மேற்கொள்ள இருந்த பிரச்சாரங்களும் ரத்து செய்யப்பட்டது இந்நிலையில் அவர் தற்போது வாக்களித்து உள்ளதாக தகவல் வெளியானது மேலும் அவர் பிபிஇ உடை அணிந்து வந்து வாக்களித்தார்.மேலும் அவர் மயிலாப்பூர் வாக்குச்சாவடியில் தனது வாக்கு பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார் கனிமொழி. மேலும் இதுபோன்று அம்பத்தூர் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலும் பிபிஇஉடை அணிந்து வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது