தமிழகத்தில் கன மழையில் காங்கேயம் முதலிடம்!வரிசையாக கொடுமுடி, பவானி!

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காங்கேயத்தில் 11 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது!
 
தமிழகத்தில் கன மழையில் காங்கேயம் முதலிடம்!வரிசையாக கொடுமுடி, பவானி!

கோடைகாலம் தொடங்கினாலே மக்கள் மத்தியில் மிகவும் எரிச்சலான சூழ்நிலை உருவாகும் காரணம் என்னவெனில் கோடைகாலம் தொடங்கினாலே தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை உருவாகிவிடும். மேலும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் ஆனது  அதிகமாக இருப்பதால் மக்கள் அனைவரும் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் சுட்டு அழிப்பதும் ஒருவித காரணமே.

rain

தமிழகத்தில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அது அதிகரித்திருந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைக்கப்பட்டு பல பகுதிகளில் மழை குறிப்பாக கன மழையும் பெய்து வந்ததாக தகவல் வெளியானது. அதன்படி தமிழகத்தில் கரூர் ஈரோடு திண்டுக்கல் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் சில தினங்களாக அடை மழை பெய்ததாக கூறப்படுகிறது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக காங்கேயம் பகுதியில் 11 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக பதியப்பட்டுள்ளது.

மேலும் கொடுமுடியில் 10 சென்டி மீட்டர் மழையும் பவானி கொடைக்கானல் போட் கிளப்பில் தலா 9 மணி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும் அவிநாசி, திருத்தணியில் தலா 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னை வில்லிவாக்கம், போடி, குமாரபாளையம் ,ஈரோடு ஆகிய இடங்களில் தலா 7சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் தாளவாடி, ஊத்துக்குளி, பள்ளிப்பட்டு ஆகிய இடங்களில் தலா 6 மீட்டர் மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் கோடை காலத்திலும் இப்படி மழை பெய்தது கோடை வெப்பம் மட்டுமில்லாமல் குடிநீரின் அளவு அதிகரித்துள்ளது. மேலும் நிலத்தடி நீரின் அளவும் வெகுவாக உயர்ந்துள்ளதாகவும் கருதப்படுகிறது.

From around the web