இன்று கங்கண சூரிய கிரகணம்: இந்தியாவில் பார்க்க முடியுமா?

 
solar eclipse

வானில் நிகழும் அற்புத நிகழ்வுகளில் ஒன்றான சூரிய கிரகணம் இன்று நிகழ இருப்பதாக நாசா அதிகாரப்பூர்வமாக தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது

2021 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று மதியம் 1.42 மணிக்கு தொடங்கி மாலை 6.41 வரை நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியன் நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும் கங்கண சூரிய கிரகணம் 4.11 மணிக்கு நிகழும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று நிகழும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றும் ஆனால் அதே நேரத்தில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மட்டும் மிகச்சிறிய அளவில் சூரியன் மறையும் சில நிமிடங்கள் மட்டும் காண வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கிழக்கு ரஷ்யா, கனடா கிரீன்லாந்து ஆகிய பகுதியில் கிரகணம் முழுமையாக தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 

சூரிய கிரகணத்தின் போது வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் சாப்பிடக்கூடாது என்றும் சமைத்த உணவுகள் மூடி வைக்கப் பட வேண்டும் என்றும் கூறப்பட்டாலும் விஞ்ஞான ரீதியில் இவை நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 

From around the web