கந்த சஷ்டி கவசம் விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு: விசாரணை செய்ய நீதிபதி ஒப்புதல்

கடந்த சில நாட்களுக்கு முன் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு வீடியோவை ஒருவர் பதிவு செய்து இருந்த நிலையில் அந்த வீடியோவுக்கு தற்போது பெரும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது குறிப்பாக இந்து மத ஆதரவாளர்கள் மற்றும் முருக பக்தர்கள் இந்த வீடியோவுக்கு எதிராக கண்டன குரல் கொடுத்து வருவதோடு இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த வீடியோ குறித்து கண்டனம் தெரிவிக்காத திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும் எதிர்ப்புகள் வலுத்து
 
கந்த சஷ்டி கவசம் விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு: விசாரணை செய்ய நீதிபதி ஒப்புதல்

கடந்த சில நாட்களுக்கு முன் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு வீடியோவை ஒருவர் பதிவு செய்து இருந்த நிலையில் அந்த வீடியோவுக்கு தற்போது பெரும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது

குறிப்பாக இந்து மத ஆதரவாளர்கள் மற்றும் முருக பக்தர்கள் இந்த வீடியோவுக்கு எதிராக கண்டன குரல் கொடுத்து வருவதோடு இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது

மேலும் இந்த வீடியோ குறித்து கண்டனம் தெரிவிக்காத திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ள பாஜக, வீடியோவை பதிவு செய்த நபருக்கும், அவர் சார்ந்த அமைப்புக்கும் எதிராக போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது

கந்தசஷ்டி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முறையீடு, மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த முறையீட்டில் மதங்களை கொச்சைப்படுத்தும் விதமாக வீடியோக்கள் பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நீதிபதியின் அறிவுரைக்கு ஏற்ப விரைவில் மனுவாக தாக்கல் செய்ய முருக பக்தர்கள் தரப்பினர் திட்டமிட்டிருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்படும் என்றும் கூறப்படுகிறது

From around the web