கந்தசஷ்டி கவசம் விவகாரம்: 2 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து!

 

கந்தசஷ்டி விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரும் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதாக சற்று முன்னர் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்து அமைப்பினர் கொதித்தெழுந்த நிலையில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன் மற்றும் செந்தில் வாசன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர் அவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இருந்த வீடியோக்கள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது நடைபெற்று வந்த நிலையில் சுரேந்திரன் மற்றும் செந்தில் வாசன் ஆகிய இருவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த இருவர் மீதும் போடப்பட்டிருந்த குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

From around the web