மூணு கோடி ரூபாய் முறைகேடு: காஞ்சி முருகன் பட்டு கூட்டுறவு சங்கக் குழு கலைப்பு!

மூணு கோடி ரூபாய் முறைகேடு புகாரில் காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக குழு கலைக்கப்பட்டது!
 
மூணு கோடி ரூபாய் முறைகேடு: காஞ்சி முருகன் பட்டு கூட்டுறவு சங்கக் குழு கலைப்பு!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு சிறப்பினை பெற்று உள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தொழில்கள் காணப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு சிறப்பான பொருட்களால் அழைக்கப்படுகிறது. சேலம் சேலத்து மாம்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி அல்வா என்றால் அனைவருக்கும் மிகவும் பிரியம் என்றும் அறியப்படுகிறது. பட்டுக்கு பேர்போன ஊராக காஞ்சிபுரம் உள்ளது. காஞ்சிபுரம் பட்டு உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு மிகவும் தரமானதாக காணப்படுகிறது.

kanchi

ஆனால்  பட்டு நெசவாளர்கள் நாளுக்கு நாள் நலிவடைந்து மக்களுக்கு மிகுந்த சோகத்தையும் அவர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தையும் அளித்துள்ளது. இந்நிலையில் தற்போது காஞ்சி முருகன் பட்டு கூட்டுறவு சங்க குழு கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மூன்று கோடி ரூபாய் முறைகேடு புகாரில் காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகக் குழு கலைக்கப் பட்டதாக கூறப்படுகிறது. மேலும் 2019ஆம் ஆண்டு பல புகார்கள் எழுந்த நிலையில் இணை இயக்குனர் மோகன் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். மேலும் இந்தக் குழு  கலைக்கப்பட்டதால் தலைவர் துணைத் தலைவர் நிர்வாக குழு உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, இளங்கோவன் தலைவர் வள்ளிநாயகம், துணைத் தலைவர் ஜெயந்தி உள்ளிட்டோரும் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும் கைத்தறித் துறை அதிகாரிகள் தொடர்ந்து நடத்தி வந்த ஆய்வில் 3 கோடிக்கு முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தற்போது காஞ்சி முருகன் பட்டு கூட்டுறவு சங்கக் குழு கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

From around the web