ஜோ பிடன் வெற்றிபெற்றாலும் கமலா ஹாரிஸ் தான் அதிபர்: டிரம்ப் அதிர்ச்சித் தகவல் 

 

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் தற்போதைய அதிபர் டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பிடன்போட்டியிடுகிறார் என்பதும், அவர் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது என்பதும் தெரிந்ததே

மேலும் துணை அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்த நிலையில்தான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த டிரம்ப், ‘அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றால் அவர் இரண்டு மாதங்கள் கூட அதிபராக நீடிக்க முடியாது. ஏனெனில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இருக்கும் கமலா ஹாரீஸ் அந்த பதவியை கைப்பற்றி விடுவார் என்று கூறியுள்ளார்.

மேலும் கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட்வாதி என்றும் அவர் சோஷலிஸ்ட் வாதி இல்லை என்றும் கூறிய அமெரிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப், கொலையாளிகள் கொள்ளைக்காரர்களை நாட்டுக்குள் அனுமதிக்கும் வகையில் கமலா ஹாரீஸ் செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார் 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன்வெற்றி பெற்றால் கமலா ஹாரிஸ் இரண்டே மாதத்தில் அந்த பதவியை பறித்து விடுவார் என்று டிரம்ப் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web