பேருந்தில் சென்ற நான் மக்களால் தான் ஹெலிகாப்டரில் செல்கிறேன் கூறும் உலக நாயகன்!

தனது நடிப்பாலும், தனது திறமையாலும் இன்று மக்கள் மத்தியில் உலகநாயகன் என்ற பெயரை பெற்றுள்ளவர் நடிகர் கமலஹாசன். நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நல்லதொரு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும் இவர் உத்தமவில்லன், விஸ்வரூபம் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ரஜினிதான் அரசியலில் வருவார் அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கமலஹாசன் அரசியல் வந்து அனைவருக்கும் கொடுத்தார். மேலும் அவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியினை உருவாக்கி மக்கள் மனதில் நல்லதொரு வரவேற்பை பெற்று அக்கட்சியின் தலைவராக உள்ளார்.
தற்போது அவர் கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் தனது ஏற்கும் அணியும் வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். அவர் அத்தொகுதியில் பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசன் எதிர்த்துப் போட்டியிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது கட்சியின் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்பாக அரசியல் எங்கள் தொழில் அல்ல என்றும் கூறியிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினர் தற்போது இன்று அவர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறினார் , "பேருந்தில் பயணம் செய்த என்னை ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வைத்தவர்கள் மக்கள் தான்" என்றும் கூறினார். மேலும் தேர்தல் ஆணையம் ஆனது அவர் ஹெலிகாப்டரில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.