இது இந்தி அரசல்ல. இந்திய அரசு: கமல்ஹாசன் காட்டம்

ஆயுஷ் அமைச்சக செயலாளர் ஒருவர் ஹிந்தி தெரியாதவர்கள் யோகா பயிற்சியில் இருந்து வெளியேறலாம் என்று கூறியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆன்லைன் மூலம் நடந்த யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான பயிற்சியில் இந்தியில் பேசிய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் குப்தா என்பவரை ஆங்கிலத்தில் பேசுமாறு தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் வலியுறுத்தினர் ஆனால் தனக்கு ஆங்கிலம் தெரியாது என்றும் ஹிந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து
 

இது இந்தி அரசல்ல. இந்திய அரசு: கமல்ஹாசன் காட்டம்

ஆயுஷ் அமைச்சக செயலாளர் ஒருவர் ஹிந்தி தெரியாதவர்கள் யோகா பயிற்சியில் இருந்து வெளியேறலாம் என்று கூறியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆன்லைன் மூலம் நடந்த யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான பயிற்சியில் இந்தியில் பேசிய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் குப்தா என்பவரை ஆங்கிலத்தில் பேசுமாறு தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் வலியுறுத்தினர்

ஆனால் தனக்கு ஆங்கிலம் தெரியாது என்றும் ஹிந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஏற்கனவே கவியரசு வைரமுத்து தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் கமலஹாசன் தனது டுவிட்டரில் காட்டமாக ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை. இது இந்தி அரசல்ல. இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம். வாழிய பாரதமணித்திருநாடு’ என்று பதிவு செய்துள்ளார்.

From around the web