இவர்களுக்கெல்லாம் நெஞ்சார்த்த வாழ்த்துக்கள்: சாத்தான்குளம் விவகாரம் குறித்து கமல்ஹாசன்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை வைத்து வியாபாரம் செய்து வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உள்ளூர் போலிஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்கள் இந்த இரட்டை மரணம் தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய நிலையில் மதுரை ஐகோர்ட் கிளை அடுத்தடுத்த அதிரடி உத்தரவு பிறப்பித்தால் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள ஒட்டுமொத்த காவலர்களும் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
 

இவர்களுக்கெல்லாம் நெஞ்சார்த்த வாழ்த்துக்கள்: சாத்தான்குளம் விவகாரம் குறித்து கமல்ஹாசன்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை வைத்து வியாபாரம் செய்து வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உள்ளூர் போலிஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்கள்

இந்த இரட்டை மரணம் தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய நிலையில் மதுரை ஐகோர்ட் கிளை அடுத்தடுத்த அதிரடி உத்தரவு பிறப்பித்தால் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள ஒட்டுமொத்த காவலர்களும் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது ரேவதி என்ற காவலர் மனசாட்சியோடு நீதிமன்றத்தில் சாட்சி சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் என்ன நடந்தது என்பதை அவர் தைரியமாக சாட்சி சொன்னதுக்கு அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி நீதிக்காக போராடி வரும் அனைவருக்கும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மேஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும், மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

From around the web