கருணாநிதி நினைவு தினத்தில் கமல் பதிவு செய்த டுவீட்

திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் இரண்டாவது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. சென்னையில் உள்ள கருணாநிதி சமாதியில் இன்று திமுக தலைவர்கள் வரிசையாக சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் மேலும் தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கருணாநிதி அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சி தலைவர்களும் கருணாநிதி நினைவு நாள் குறித்து
 
கருணாநிதி நினைவு தினத்தில் கமல் பதிவு செய்த டுவீட்

திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் இரண்டாவது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. சென்னையில் உள்ள கருணாநிதி சமாதியில் இன்று திமுக தலைவர்கள் வரிசையாக சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கருணாநிதி அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சி தலைவர்களும் கருணாநிதி நினைவு நாள் குறித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

இந்த நிலையில் கருணாநிதிக்கு நெருக்கமானவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் கருணாநிதியின் இரண்டாவது நினைவு நாளை ஒட்டி தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

வள்ளுவருக்கு சிலை வடித்தும், வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் தமிழையும், தமிழ் சான்றோரையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர்.

From around the web