க.அன்பழகன் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அவர்களின் மறைவின் காரணமாக திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட திமுக தொண்டர்கள் அனைவரும் பெரும் சோகத்தில் உள்ளனர் க.அன்பழகன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் க.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை
 
க.அன்பழகன் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அவர்களின் மறைவின் காரணமாக திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட திமுக தொண்டர்கள் அனைவரும் பெரும் சோகத்தில் உள்ளனர்

க.அன்பழகன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் க.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது

தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் திரு.அன்பழகன் அவர்களின் இழப்பு வேதனைக்குரியது. அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்

From around the web