என் ஆழ்ந்த அனுதாபங்கள்: காட்டுத்தீயில் பலியானவர்களுக்கு கமல் இரங்கல்

தேனி அருகேயுள்ள மலைப்பகுதியான குரங்கணி வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ நேற்று விடிய விடிய கொழுந்துவிட்டு எரிந்த நிலையில் தீயில் சிக்கிய மாணவிகள் உள்பட மற்றவர்களையும் மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் இரவு முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் கமாண்டோ படையினர் களத்தில் இறங்கி தீயில் சிக்கி காயம் அடைந்தவர்களை மலையின் அடிவாரத்திற்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதாகவும், 27 பேர் காயத்துடன் மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த
 

தேனி அருகேயுள்ள மலைப்பகுதியான குரங்கணி வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ நேற்று விடிய விடிய கொழுந்துவிட்டு எரிந்த நிலையில் தீயில் சிக்கிய மாணவிகள் உள்பட மற்றவர்களையும் மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் இரவு முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை முதல் கமாண்டோ படையினர் களத்தில் இறங்கி தீயில் சிக்கி காயம் அடைந்தவர்களை மலையின் அடிவாரத்திற்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதாகவும், 27 பேர் காயத்துடன் மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் நடிகரும் அரசியல் கட்சி ஒன்றின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கருங்குணி. விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்

From around the web