அரசு செய்ய மறந்ததை செய்த மீனவர்கள்: கமல்ஹாசன் டுவீட்

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் துறை பகுதியில் உள்ள தூத்தூர் என்ற பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென இரண்டு படகுகள் சுவர் மற்றும் மணல் மேடுகளில் சிக்கி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் படகில் இருந்து பார்த்த மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்தபோது, உடனடியாக அருகில் இருந்த படகுகளில் இருந்த மீனவர்கள் மற்றும் கரையில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து கடலில் சிக்கி கொண்டு இருந்த மீனவர்களை காப்பாற்றினார்கள். இதனால் 10
 

அரசு செய்ய மறந்ததை செய்த மீனவர்கள்: கமல்ஹாசன் டுவீட்

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் துறை பகுதியில் உள்ள தூத்தூர் என்ற பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென இரண்டு படகுகள் சுவர் மற்றும் மணல் மேடுகளில் சிக்கி விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் படகில் இருந்து பார்த்த மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்தபோது, உடனடியாக அருகில் இருந்த படகுகளில் இருந்த மீனவர்கள் மற்றும் கரையில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து கடலில் சிக்கி கொண்டு இருந்த மீனவர்களை காப்பாற்றினார்கள். இதனால் 10 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த பகுதியில் அதிக அளவு மணல் மேடு மற்றும் திட்டுக்கள் இருப்பதால் அவற்றை ஆழப்படுத்தி மற்றும் அகலப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதி மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து உண்ணாவிரத போராட்டமும் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவும், மீனவர்கள் துரிதமாக காப்பாற்றியது குறித்தும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தூத்தூர் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த திரு.ராஜனின் தலைமையில், 4 மீனவச் சகோதரர்கள், ஆபத்தான முகத் துவாரத்தில் படகு கவிழ்ந்து உயிருக்குப் போராடிய சக மீனவர்களைக் காப்பாற்றியது, அரசுக்குச் செய்தியாக மட்டும் செல்லாமல், அரசு செய்ய மறந்ததை நினைவுறுத்தும் சோகமாக சென்றடையட்டும். “நாமே தீர்வு” எனும் நம் கோஷத்திற்கு எடுத்துக்காட்டு, வீரம் நிறைந்த இந்த ஐவர் குழு.

From around the web