சொந்த ஊரில் மேடையேறாத கமல்: ரசிகர்கள் அதிருப்தி

நடிகர் கமல்ஹாசன் இன்று காலை அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நிலையில் திட்டமிட்டபடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் அந்த வகையில் இன்று மதியம் அவரது சொந்த ஊரான பரமக்குடியில் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு மேடையும் அமைக்கப்பட்டிருந்தது ஆனால் பரமக்குடிக்கு வந்த கமல்ஹாசன், மேடையேறாமல், காரில் இருந்தே பேசினார். எவ்வளவு அன்பு இருந்தால் இந்த வெயிலிலும் உங்கள் ஊர் பையனை பார்க்கக் காத்திருப்பீர்கள். இதற்கு என்ன கை மாறு செய்யப்போகிறேன்
 

சொந்த ஊரில் மேடையேறாத கமல்: ரசிகர்கள் அதிருப்திநடிகர் கமல்ஹாசன் இன்று காலை அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நிலையில் திட்டமிட்டபடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்

அந்த வகையில் இன்று மதியம் அவரது சொந்த ஊரான பரமக்குடியில் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு மேடையும் அமைக்கப்பட்டிருந்தது

ஆனால் பரமக்குடிக்கு வந்த கமல்ஹாசன், மேடையேறாமல், காரில் இருந்தே பேசினார். எவ்வளவு அன்பு இருந்தால் இந்த வெயிலிலும் உங்கள் ஊர் பையனை பார்க்கக் காத்திருப்பீர்கள். இதற்கு என்ன கை மாறு செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை. நிறைய வேலை இருக்கிறது. மீண்டும் உங்களிடம் வருவேன். மதுரையில் நடக்கும் நிகழ்வுக்கு வரும் டெல்லி முதல்வரை வரவேற்க செல்வதால் உடனடியாக கிளம்பிச்செல்கிறேன். மீண்டும் உங்களிடம் பேசுவேன்,” என்று பேசிய கமல், டெல்லி முதல்வர் மதுரை வரும் நேரம் நெருங்கிவிட்டதால் அவரை வரவேற்க செல்வதாகவும், மீண்டும் பரமக்குடி வந்து மேடையேறி பேசுவேன் என்றும் உறுதியளித்து சொந்த ஊரில் இருந்து விடைபெற்றார். கமல் மேடை ஏறி பேசாததால் அவருடைய ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

From around the web