சென்னை டாஸ்மாக் திறப்பு குறித்து டுவீட் மூலம் கேள்வி எழுப்பிய கமல்ஹாசன்!

கடந்த நான்கு மாதங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் நாளை முதல் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு உண்டான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி டாஸ்மாக் கடைகள் முன் சாமியானா பந்தல் போட வேண்டும், மைக் ஏற்பாடு செய்ய வேண்டும், வாடிக்கையாளர்கள்
 

சென்னை டாஸ்மாக் திறப்பு குறித்து டுவீட் மூலம் கேள்வி எழுப்பிய கமல்ஹாசன்!

கடந்த நான்கு மாதங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் நாளை முதல் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு உண்டான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி டாஸ்மாக் கடைகள் முன் சாமியானா பந்தல் போட வேண்டும், மைக் ஏற்பாடு செய்ய வேண்டும், வாடிக்கையாளர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதற்காக 3 அடிக்கு ஒரு வட்டம் போட்டு வைக்கவேண்டும், வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் மற்றும் தினமும் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க வேண்டும் உள்பட ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்தது

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு ஏற்கனவே பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது கமலஹாசன் தனது பாணியில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது:

காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது. மதுக்கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்?

From around the web