சென்னையில் கமல் கட்சியின் முதல் கூட்டம்: மகளிர் தினத்தில் நடப்பது ஏன்?

சென்னையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்ப்பில் வரும் 8ஆம் தேதி பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டம் உலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறியபோது, மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஏராளமான பெண் உறுப்பினர்களை சேர்க்கவே இந்த திட்டம் என்று கூறினார். சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்தப்படவுள்ள இந்த பொதுக்கூட்டம் கமல் கட்சியின் முதல் சென்னை கூட்டம்
 

சென்னையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்ப்பில் வரும் 8ஆம் தேதி பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் உலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறியபோது, மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஏராளமான பெண் உறுப்பினர்களை சேர்க்கவே இந்த திட்டம் என்று கூறினார்.

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்தப்படவுள்ள இந்த பொதுக்கூட்டம் கமல் கட்சியின் முதல் சென்னை கூட்டம் என்பதால் மிகவும் பிரமாண்டமாக நடத்த உயர்மட்ட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த குழுவில் நடிகை ஸ்ரீப்ரியா, சினேகன் உள்பட பலர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பொதுக்கூட்டத்தில் கமல் ஒருசில முக்கிய அறிவிப்புகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web