அரசியல் களத்துக்கு மீண்டும் வாருங்கள்: விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்த பிரபலம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தனது வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார் அவர் இதுகுறித்து கூறியதாவது: தமிழக அரசியல் களம் மீண்டும் முழு வீச்சில் உங்களைக் காணக் காத்திருக்கிறது; மக்கள் பணியைத் தொடர வாழ்த்துக்கள் நண்பர் விஜயகாந்த் அவர்களே’ என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திமுக தலைவர் மு க
 

அரசியல் களத்துக்கு மீண்டும் வாருங்கள்: விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்த பிரபலம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தனது வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

அவர் இதுகுறித்து கூறியதாவது: தமிழக அரசியல் களம் மீண்டும் முழு வீச்சில் உங்களைக் காணக் காத்திருக்கிறது; மக்கள் பணியைத் தொடர வாழ்த்துக்கள் நண்பர் விஜயகாந்த் அவர்களே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் அந்த வரிசையில் தற்போது கமல்ஹாசன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இல்லாத கூட்டணி ஒன்று உருவானால் அதில் விஜயகாந்த் மற்றும் கமலஹாசன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web