அவர் நடிப்பில் சக்கரவர்த்தியாக இருக்கலாம், ஆனால் அரசியலில் எல்கேஜி தான்: செல்லூர் ராஜூ கூறியது யாரை?

நடிப்பில் அவர் சக்கரவர்த்தியாக இருந்தாலும் அரசியலில் இன்னும் அவர் எல்கேஜி தான் என்று கமலஹாசன் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அரசியல் கட்சியை தொடங்கி இருந்தாலும் அவரது கட்சி இன்னும் மக்கள் மத்தியில் சேரவில்லை என்றுதான் கூறப்படுகிறது கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்
 

அவர் நடிப்பில் சக்கரவர்த்தியாக இருக்கலாம், ஆனால் அரசியலில் எல்கேஜி தான்: செல்லூர் ராஜூ கூறியது யாரை?

நடிப்பில் அவர் சக்கரவர்த்தியாக இருந்தாலும் அரசியலில் இன்னும் அவர் எல்கேஜி தான் என்று கமலஹாசன் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அரசியல் கட்சியை தொடங்கி இருந்தாலும் அவரது கட்சி இன்னும் மக்கள் மத்தியில் சேரவில்லை என்றுதான் கூறப்படுகிறது

கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வாய்ப்பு இல்லை என்றும் ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சற்று முன் கமலஹாசன் அரசியல் நிலை குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியபோது ’கமலஹாசன் அவர்கள் நடிப்பில் சக்கரவர்த்தி என்பது தெரிந்ததுதான். அது உண்மையும் கூட. ஆனால் அதே நேரத்தில் அரசியலில் அவர் இன்னும் எல்.கே.ஜியில் கூட சேரவில்லை என்று கூறியுள்ளார். கமலஹாசன் அரசியல் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web