திமுக-கமல் கூட்டணியா? பரபரப்பு தகவல்

திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் காலமானதை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் கமலஹாசன் அவர்கள் தொலைபேசியில் பேசி இரங்கல் தெரிவித்தார் என்பது தெரிந்ததே. இந்த பேச்சு அன்பழகன் அவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பது மட்டுமின்றி திமுகவுடன் கூட்டணிக்கு அச்சாரமாக அமைந்து விட்டதாக கூறப்படுகிறது கடந்து 2019 ஆம் தேதி நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில்கூட கமலஹாசன் கட்சி வெற்றி பெறவில்லை என்றாலும் நகர்ப்பகுதிகளில் பெருவாரியான வாக்குகளைப் பெற்றார். இந்த வாக்குகள் திமுகவிற்கு வரும் சட்டமன்ற
 

திமுக-கமல் கூட்டணியா? பரபரப்பு தகவல்

திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் காலமானதை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் கமலஹாசன் அவர்கள் தொலைபேசியில் பேசி இரங்கல் தெரிவித்தார் என்பது தெரிந்ததே. இந்த பேச்சு அன்பழகன் அவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பது மட்டுமின்றி திமுகவுடன் கூட்டணிக்கு அச்சாரமாக அமைந்து விட்டதாக கூறப்படுகிறது

கடந்து 2019 ஆம் தேதி நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில்கூட கமலஹாசன் கட்சி வெற்றி பெறவில்லை என்றாலும் நகர்ப்பகுதிகளில் பெருவாரியான வாக்குகளைப் பெற்றார். இந்த வாக்குகள் திமுகவிற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் உதவியாக இருக்கும் என்றும் எனவே திமுக அதனுடைய கூட்டணியில் கமல் கட்சியை சேர்க்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே தேமுதிக பாமக உள்ளிட்ட பெரிய கட்சிகள் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியே வர வாய்ப்பில்லை என்பதால் கமல் கட்சி உள்பட ஒருசில காட்சிகளை வளைத்துப்போட திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்து திம்க கூட்டணியில் கமல் கட்சிக்கு இடம் கிடைத்தால் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் கமல் கட்சிக்கு 20 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தமிழகத்தின் அடுத்த முதல்வர், கழகங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்கும் தலைவர் என கமல் கட்சியினர் நினைத்திருந்த நிலையில் திடீரென திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வெளிவந்துள்ள தகவல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

From around the web