நாம் தமிழர் கட்சியில் இருந்து அதிகாரபூர்வமாக விலகிய கல்யாணசுந்தரம்: விலகல் கடிதம் வெளியீடு 

நாம் தமிழர் கட்சியில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக இருந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் நேற்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் 

 

நாம் தமிழர் கட்சியில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக இருந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் நேற்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் 

இந்த நிலையில் தற்போது இதுகுறித்து சீமானுக்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

மரியாதைக்குரிய சீமான் அவர்களுக்கு வணக்கம்! கடந்த 11 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராகவும் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளேன். சமீப காலமாக ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக இனிமேல் கட்சியின் தொடர முடியாத நிலையில் இருப்பதால் இக்கடிதம் மூலமாக எனது விலகலை அறிவிக்கின்றேன்

இந்த பயணத்தில் என்னோடு பேரன்போடு உதவிகரமாக பயணித்த அனைத்து உறவுகள் பொறுப்பாளர்கள் என் அன்பிற்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றிகளை தெரிவிப்பதோடு எதிர்காலம் உங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன். இவ்வாறு பேராசிரியர் கல்யாணசுந்தரம் தனது விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்

From around the web