தினகரன் அணியில் மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ?

டிடிவி தினகரன் அணிக்கு ஆதரவு கொடுக்கும் எம்.எல்.ஏக்கள் சிலர் அதிமுகவில் ஸ்லீப்பர் செல் ஆக இருந்து வருவதாக தினகரன் தரப்பினர்களால் கூறப்பட்டு வரும் நிலையில் இன்று திடீரென அதிமுகவை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ தினகரனை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு இன்று தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார். இது மரியாதை நிமித்த சந்திப்பா? அல்லது அணிமாறும் சந்திப்பா? என்று இந்த சந்திப்பு முடிந்தவுடன் தான் தெரியவரும்.
 

தினகரன் அணியில் மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ?

டிடிவி தினகரன் அணிக்கு ஆதரவு கொடுக்கும் எம்.எல்.ஏக்கள் சிலர் அதிமுகவில் ஸ்லீப்பர் செல் ஆக இருந்து வருவதாக தினகரன் தரப்பினர்களால் கூறப்பட்டு வரும் நிலையில் இன்று திடீரென அதிமுகவை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ தினகரனை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு இன்று தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார். இது மரியாதை நிமித்த சந்திப்பா? அல்லது அணிமாறும் சந்திப்பா? என்று இந்த சந்திப்பு முடிந்தவுடன் தான் தெரியவரும்.

இருப்பினும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கைக்கு உகந்தவர்களில் ஒருவரான பிரபு எம்.எல்.ஏ, திடீரென தினகரனை சந்தித்திருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web