கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ திருமண விவகாரம்: தீர்ப்பு எப்போது?

 

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு, கல்லூரி மாணவி சவுந்தர்யாவை காதல் திருமணம் செய்ததை அடுத்து சவுந்தர்யாவின் தந்தை தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

கல்லகுறிச்சி எம்எல்ஏ பிரபு தனது மகளை கடத்திச் சென்று திருமணம் செய்து விட்டதாக ஆட்கொணர்வு மனுவை செய்திருந்தார் என்பதும் ஆனால் நான்தான் யாராலும் நடத்தப்படவில்லை என்றும் தானாகவே விரும்பி தான் திருமணம் செய்து கொண்டதாக அவரது மகள் சவுந்தர்யா கூறியிருந்தார் என்பதும் தெரிந்ததே

இந்த ஆட்கொணர்வு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இன்றைய விசாரணையின்போது கல்லூரி மாணவி சவுந்தர்யா நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கில் இருவரும் கலந்துபேசி இறுதி முடிவை அறிவிக்க நீதிபதிகள் பிற்பகல் வரை அவகாசம் கொடுத்து உள்ளதாகவும் பிற்பகலில் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது என்றும் நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன

இன்று பிற்பகலில் வெளிவரும் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் உள்ளனர்

From around the web