மத்திய பிரதேசத்தில் திடீர் திருப்பம்: அமித்ஷாவை சந்தித்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா

மத்திய பிரதேசத்தில் முதல்அமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு திடீரென பிரச்சினை வந்த நிலையில் நேற்றிலிருந்து 17 எம்எல்ஏக்களை திடீரென காணவில்லை என்று கூறப்படுகிறது ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்பட 17 எம்எல்ஏக்கள் பெங்களூரில் இருப்பதாகவும் சிந்தியாவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் மட்டுமே காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு என்று அவர்கள் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்து ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சி செய்வதாகவும் இதுகுறித்து நள்ளிரவில் அமித்ஷா
 
மத்திய பிரதேசத்தில் திடீர் திருப்பம்: அமித்ஷாவை சந்தித்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா

மத்திய பிரதேசத்தில் முதல்அமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு திடீரென பிரச்சினை வந்த நிலையில் நேற்றிலிருந்து 17 எம்எல்ஏக்களை திடீரென காணவில்லை என்று கூறப்படுகிறது

ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்பட 17 எம்எல்ஏக்கள் பெங்களூரில் இருப்பதாகவும் சிந்தியாவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் மட்டுமே காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு என்று அவர்கள் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்து ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சி செய்வதாகவும் இதுகுறித்து நள்ளிரவில் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் ஆலோசனை செய்ததாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் சற்றுமுன் ஜோதிர் ஆதித்ய சிந்தியா அவர்கள், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பு மத்திய பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web