ஜூன் 8, உலக மூளைக்கட்டி தினம்!

 
tumour day

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8ஆம் தேதி உலக மூளைக்கட்டி தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மூளைக்கட்டி தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது

மூளைக்கட்டி சிக்கல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மருத்துவர்கள் அவ்வப்போது பல அறிவுரைகளை தெரிவித்துள்ள நிலையில் இன்று மூளைக்கட்டி தினத்தையொட்டி அது குறித்து சில தகவல்களை பார்ப்போம் 

மூளைக்கட்டி சிக்கல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரு சில முக்கிய உணவுகளை உண்ண வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். விட்டமின் சி, விட்டமின் ஈ நிறைந்த உணவுகள் கீரைகள், கேரட், சக்கரைவள்ளி கிழங்கு, பழங்கள், மீன் போன்றவற்றை தினசரி உணவில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 

மூளைக்கட்டி என்பது மூளை என்னும் உயிரணுக்களின் அசாதாரணமான வளர்ச்சியை குறிக்கும் ஒரு நோயாகும். இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 2000 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி உலக மூளைக்கட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது. மூளையில் உருவாகும் கட்டி புற்றுநோயாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web