11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை குறித்த முக்கிய தகவல்

10ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ஜூன் 1ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தது என்பதும் அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விடுத்த வேண்டுகோளின்படி தற்போது இந்த தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடைபெறும் 10ஆம் வகுப்பு தேர்வுகளின் தேர்வுத்தாள்கள் திருத்தும் பணி ஜூலை 1 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் ஜூன் 15ஆம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி
 

11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை குறித்த முக்கிய தகவல்

10ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ஜூன் 1ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தது என்பதும் அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விடுத்த வேண்டுகோளின்படி தற்போது இந்த தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடைபெறும் 10ஆம் வகுப்பு தேர்வுகளின் தேர்வுத்தாள்கள் திருத்தும் பணி ஜூலை 1 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ஜூன் 15ஆம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்று தேர்வுத்தாள்களும் திருத்தப்பட்டால் தேர்வு முடிவுகள் ஜூலை 15 ஆம் தேதிக்குள் வெளியாகும் என்றும் இதனையடுத்து ஜூலை 3வது வாரத்தில் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்றும், மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துளார். தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

From around the web