ஜூலை 13ல் பள்ளிகள் திறப்பதில் திடீர் சிக்கல்: மத்திய அரசின் அதிரடி கடிதம்!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த நான்கு மாதங்களாக திறக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் ஜூலை13 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு நேற்று அறிவித்திருந்தது இதற்கான விதிமுறைகளை வகுக்கப்பட்டு வருவதாகவும், நிபந்தனைகள் குறித்து அரசு ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது ஆனால் மத்திய அரசு ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில்
 
ஜூலை 13ல் பள்ளிகள் திறப்பதில் திடீர் சிக்கல்: மத்திய அரசின் அதிரடி கடிதம்!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த நான்கு மாதங்களாக திறக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் ஜூலை13 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு நேற்று அறிவித்திருந்தது இதற்கான விதிமுறைகளை வகுக்கப்பட்டு வருவதாகவும், நிபந்தனைகள் குறித்து அரசு ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது

ஆனால் மத்திய அரசு ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் அதன் வழிகாட்டுதலில் ஜூலை 31 வரை பள்ளி கல்லூரிகள் திறக்க கூடாது என்று அறிவித்து இருந்தது. இந்த நிலையில் ஆந்திர அரசு மட்டும் ஜூலை 13-ஆம் தேதி பள்ளி திறக்கப்பட உள்ளதாக வெளியான அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் மத்திய அரசு தற்போது அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது அதில் நாடு முழுவதும் வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகள் செயல்படக் கூடாது என்பதை உறுதி செய்யவேண்டுமென்றும், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடி இருப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் ஜூலை 13-ல் ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

From around the web