விராத் கோஹ்லி, தமன்னாவுக்கு நீதிபதிகள் கண்டனம்: ஏன் தெரியுமா?

 

விளையாட்டு வீரர்களும் நடிகர்களும் விளம்பர படங்களில் நடிக்கும்போது பொறுப்புணர்வோடு நடக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்தது. அப்போது நீதிபதிகள் விளையாட்டு வீரர்கள் மற்றும் நடிகர்கள் விளம்பர படங்களில் நடிக்கும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார் 

ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் விராட் கோலி தமன்னா உள்பட பல விளையாட்டு வீரர்களும் நடிகர் நடிகைகளும் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு தான் இந்த அறிவுரை என்பது குறிப்பிடத்தக்கது

virat tamanna

இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியால் பல இளைஞர்கள் தங்களுடைய ஏராளமான பணத்தை இழப்பது மட்டுமின்றி உயிரை இழந்து வருகிறார்கள் என்றும் இதனால் நாடு முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி செய்யப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் நீதிபதிகளின் இந்த அறிவுரைக்கு பின்னராவது விளையாட்டு வீரர்களும் நடிகர் நடிகைகளும் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிப்பதில் இருந்து விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web