ராகுல் காந்திக்கு புரிதல்திறன் கொஞ்சம் கம்மிதான்… ஜே.பி.நட்டா பேட்டி!!

கொரோனாத் தொற்று மார்ச் மாதம் இந்தியாவில் கால் பதித்த நிலையில், கட்டுக்குள் கொண்டுவர மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 வரை ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் ஊரடங்கானது தோல்வியில்தான் முடிந்தது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜே.பி.நட்டா ராகுல் காந்திக்கு புரிதல் திறன் கொஞ்சம் குறைவு என்று சாடியுள்ளார். அவர் கூறும்போது, “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா சிறப்பான எதிர்கொண்டு தீர்வு கண்டு வருகின்றது. இரண்டாம் கட்டத்தில்
 
ராகுல் காந்திக்கு புரிதல்திறன் கொஞ்சம் கம்மிதான்… ஜே.பி.நட்டா பேட்டி!!

கொரோனாத் தொற்று மார்ச் மாதம் இந்தியாவில் கால் பதித்த நிலையில், கட்டுக்குள் கொண்டுவர மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 வரை ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் ஊரடங்கானது தோல்வியில்தான் முடிந்தது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜே.பி.நட்டா ராகுல் காந்திக்கு புரிதல் திறன் கொஞ்சம் குறைவு என்று சாடியுள்ளார்.

அவர் கூறும்போது, “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா சிறப்பான எதிர்கொண்டு தீர்வு கண்டு வருகின்றது. இரண்டாம் கட்டத்தில் இருந்து மூன்றாம் கட்டத்தினை எட்ட இந்தியா எடுத்துக் கொண்ட நாட்கள் அதிகமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ராகுல் காந்திக்கு புரிதல்திறன் கொஞ்சம் கம்மிதான்… ஜே.பி.நட்டா பேட்டி!!

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படும் என உலகமே எண்ணியிருந்தநிலையில் நாங்கள் ஊரடங்கின்மூலம் சிறப்பான தீர்வு கண்டுள்ளோம்.

ராகுல் காந்திக்கு ஆழமான புரிதல் இல்லை என்பது இது காட்டுகிறது. அவரது புரிதல் திறன் சற்று குறைவு என்பதால் சில நேரங்களில் ஊரடங்கு ஏன்? என்றும் சில நேரங்களில்  ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்.

நம்மைவிட பொருளாதார அளவில் முன்னேறிய நாடுகளும், மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தோல்வி அடைகையில் நாம் வெற்றி கண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

From around the web