பெரும்பான்மையை நெருங்குகிறார் ஜோ பைடன்: அடுத்த அமெரிக்க அதிபரா?

 


அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடந்த நிலையில் அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 227 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறார். அவருக்கு எதிராக போட்டியிட்டு வரும் தற்போதைய அதிபர் டிரம்புக்கு 204 இடங்கள் கிடைத்துள்ளது

அமெரிக்க அதிபர் தேர்தலில் 270 இடங்கள் கிடைத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் ஜோ பிடன் பெரும்பான்மையை நெருங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிக்கு தேவையான மேஜிக் நம்பரை நோக்கி ஜோபைடன் முன்னேறி வருவதால் அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சற்றுமுன் வெளியான அமெரிக்காவின் முன்னணி ஊடகத்தின் செய்தியின்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு 227 எலக்ட்ரால் வாக்குகள் கிடைத்துள்ளதாகவும், இன்னும் அவர் 43 வாக்குகளை பெற்றால் அதிபராகிவிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜோபைடன் பல தொகுதிகளில் வேகமாக முன்னேறி வருவதால் எந்த நேரத்திலும் அவரது வெற்றி உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆனால் அதே நேரத்தில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பிற்கு 210 எலக்ட்ரால் வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் டிரம்ப் மீண்டும் அதிபராக வேண்டும் என்றால் அவர் இன்னும்  60 வாக்குகளை பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web