பெரும்பான்மைக்கு பக்கத்தில் வந்துவிட்ட ஜோபைடன்: அடுத்த அமெரிக்க அதிபரா?

 

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நேற்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களில் ஒருவரான ஜோ பைடன் கிட்டத்தட்ட பெரும்பான்மைக்கு நெருங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஜோபைடனுக்கு 264 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. மொத்தமுள்ள இடங்களில் 270 இடங்கள் கிடைத்தால் அடுத்த அமெரிக்க அதிபர் ஆகலாம் என்ற நிலையில் அவருக்கு இன்னும் ஆறு இடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த நிலையில் டிரம்புக்கு 214 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரு சில மாகாணங்களின் முடிவு மொத்த முடிவை தலைகீழாக மாற்றும் என்பதால் அடுத்தடுத்து முடிவுகள் வந்தால் மட்டுமே அடுத்த அதிபர் யார் என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியும் 

இந்த நிலையில் தபால் வாக்குகள் ஜோபைடனுக்கு ஆதரவாக அதிகமாக வந்து கொண்டிருப்பதை அடுத்து தபால் வாக்குகளில் முறைகேடுகள் இருப்பதாகவும், எனவே வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும் என்றும் டிரம்ப் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தற்போது எவ்வளவு வாக்குகள் எண்ணப்பட்டு இருக்கின்றதோ அத்துடன் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவிட்டு முடிவை அறிவிக்க வேண்டும் என்று டிரம்ப் தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் இதற்கு ஜோபைடன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் 

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக அதிபர் ஒருவரே குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்திருப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web