ஜோபைடன், கமலாஹாரீஸ் வெற்றி: மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!

 
ஜோபைடன், கமலாஹாரீஸ் வெற்றி: மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!

அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்று பதிவான வாக்குகள் கடந்த 5 நாட்களாக எண்ணப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜோ பைடன் 46 ஆவது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் 

அதேபோல் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் அவர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் வரும் ஜனவரி மாதம் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

harris joe

இந்த நிலையில் வெற்றிபெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி அவர்களும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்களும் மற்ற இந்திய தலைவர்களும் ஜோபைடன், கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் 

இந்த நிலையில் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது ’அமெரிக்க மக்கள் தங்களுடைய வாக்குகளின் மூலம் தெளிவான முடிவை அளித்துள்ளதாகவும் டிரம்புக்கு வாக்களித்தவர்களும் அமெரிக்கர்கள் தான் என்பதால் அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கைக்கு உரியவனாக தான் செயல்படுவேன் என்றும் அவர் கூறினார். மேலும் கொரோனா காலத்திலும் பெரும் திரளாக வந்து வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்

துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ் கூறியபோது ’அமெரிக்க தேர்தல் மூலம் அமெரிக்காவில் எதையும் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளோம் என்றும், ஒபாமா வழியில் அமெரிக்க நலனுக்காக செயல்படுவேன் என்றும் 53 ஆண்டுகளுக்கு முன் வாக்களிக்கும் உரிமை பெற்ற பெண்கள் புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

From around the web